May 02

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!

ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (REFUGEESTATUS)கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்குஉள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவசிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், “சகாயகரபாதுகாப்பு” ( SUBSIDIARY PROTECTION ) என்றுஅழைக்கப்படும் புகலிட அனுமதியை பெற்றுக்கொள்ள இயலும் என ஐரோப்பிய நீதிமன்றம் (EUROPEAN COURT OFJUSTICE)தீர்ப்பளித்துள்ளது.

சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான திரு அருண் கணநாதன் மற்றும் கீத் குலசேகரம்ஆகியயோரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட ஒரு ஈழத்தமிழர் தொடர்பிலான வழக்கிலேயேஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

அதாவது மனித உரிமைச் சட்ட விதியின் கீழ் ஐரோப்பாவில் தஞ்சம்கோரிவிண்ணப்பிக்கும் ஒருவர் கடந்தகாலத்தில் அனுபவித்த சித்திரவதைகளின் விளைவாக தமதுஉடல் அல்லது உளவியல் சார்ந்த கடுமையான பாதிப்புகளை கொண்டிருந்து அவர்சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில. தமது சொந்த நாட்டில் கொலைஅச்சுறுத்தல் போன்ற தீங்குகள் இல்லாவிடினும் போதிய சிகிச்சையின்றி மிகமோசமாகபாதிக்கப்பட நேரிடும் அல்லது தற்கொலை செய்துகொள்ள நேரும் எனக்கண்டால் சப்சிடரிப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்றுஅழைக்கப்படும் புகலிடம்; வழங்க ஐரோப்பிய நீதிமன்றம்அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.