May 02

பிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்!

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அதனை முடித்துக் கொண்டு நேற்று மே 1 ஆம் திகதி அவுஸ்திரேலியாக்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு, அவுஸ்திரேலிய அரசுடன் புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றவும், நல்லுறவை பேணவும் அவசியம் என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரு நாட்கள் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ள மக்ரோன், உள்ளூர் கலைஞர்களையும் சந்திக்க உள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் €31 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள வியாபார ஒப்பந்தம் ஒன்றில் பிரான்ஸ் கைச்சாத்திட உள்ளதாக அறிய முடிகிறது. மேலும், அவர் மே மாதம் 3 ஆம் திகதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மக்ரோன் நாடு திரும்புவார்.

மிகக் குறைவான பிரெஞ்சு ஜனாதிபதிகளே அவுஸ்திரேலியா விஜயம் மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.