May 02

ஐபோன் 8 பிழையை சரிசெய்யும் ஐஓஎஸ் அப்டேட்

ஐபோன், ஐபேட் மற்றும் ஐபாட் டச் சாதனங்களுக்கான ஐஓஎஸ் 11.3.1 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 8 சாதனங்களில் ஏற்பட்ட பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

ஐபோன், ஐபேட் மற்றும் ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களுக்கான ஐஓஎஸ் 11.3 அப்டேட்-ஐ ஆப்பிள் வெளியிட்டுள்ளது. 

புதிய அப்டேட் 11.3.1 அப்டேட் ஐபோன் 8 மாடல்களில் ஏற்பட்ட பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன. 47.5 எம்பி அளவில் கிடைக்கும் இந்த அப்டேட்-ஐ ஆப்பிள் சாதனத்தின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் உள்ளிட்ட ஆப்ஷன்களுக்கு சென்று இயக்க முடியும். 

இந்த அப்டேட் சில ஐபோன் 8 திரை ஆப்பிள் அல்லாத மூன்றாம் தரப்பு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு வேலை செய்யாமல் போதும் பிரச்சனையை சரி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வழங்கும் உதிரிபாகங்களால் தொடுதிரை இயங்காத ஐபோன் மாடல்களுக்காக புதிய மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை சார்ந்த கோளாறுகளை சரி செய்ய மூன்றாம் தரப்பு சர்வீஸ் மையங்களுக்கு செல்லாமல் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் தங்களது ஐபோனினை சரி செய்ய வேண்டும் என ஆப்பிள் கேட்டுக் கொண்டுள்ளது. மற்ற இடங்களில் கிடைக்கும் தரமற்ற பாகங்களால் ஐபோன் அனுபவம் பாதிக்கப்பட்டு சாதனம் சீராக வேலை செய்யாமல் போகலாம். 

ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி நம்பத்தகுந்த வல்லுநர்களால் ஐபோன்கள் சரி செய்யப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மதர்போர்டு மூலம் கடந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த பிழை சில ஐபோன் 8 மாடல்களில் திரை சீராக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை வெளிப்படுத்தியது. ஆப்பிள் ஐபோன்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்கனவே சிலமுறை நேர்ந்திருக்கின்றன. கடந்த வாரம் இதேபோன்ற பிரச்சனை சில ஐபோன் 7 மாடல்களில் ஏற்பட்டது.