May 01

சிற்றூர்தி தாக்குதலில் உயிரிழந்த 10பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

ரொறன்ரோ- நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய, சிற்றூர்தி தாக்குதலில் உயிரிழந்த 10பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமை மரண விசாரணை அதிகாரி டிர்க் ஹூயர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், ரொறன்ரோவைச் சேர்ந்த 45 வயதான ரேனுகா அமரசிங்க, வூட்பிரிட்ஜைச் சேர்ந்த 33 வயதான ஆனட்ரியா பிரடன், ரொறன்ரோவைச் சேர்ந்த 83 வயதான கிரால்டின் பிரடி, ரொறன்ரோவைச் சேர்ந்த 22 வயதான சோ ஹீ ச்சங், ரொறன்ரோவைச் சேர்ந்த 30 வயதான ஆன் மரியா, ரொறன்ரோவைச் சேர்நத 94 வயதான மேரி எரிசபெத் ஃபோர்ஸித், ரொறன்ரோவைச் சேர்ந்த 22 வயதான ஜீ ஹூன் கிம், ரொறன்ரோவச் சேர்நத 80 வயதான டொறோதி ஸிவெல், ரொறன்ரோவைச் சேர்ந்த 45 வயதான சுல் மின் காங், ரொறன்ரோவைச் சேர்ந்த 85 வயதான முனிர் அப்டோ ஹபிப் நிஜார் ஆகிய 10 பேரே கொல்லப்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய, சிற்றூர்தி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய றிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த அலெக் மினாசின் மீது 10 முதல் தரக் கொலை குற்றச்சாட்டுகளும், 13 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.