May 01

திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில், திறந்த வழியே வரும் சத்தத்தைப் பாதியாகக் குறைக்கக் கூடிய கருவியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதல் முறையாக இந்த கருவியை உருவாக்கிய பெருமை நன்யாங் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேரும்.

ரயில் தடத்திற்கு அருகில் அல்லது நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் குடியிருப்போருக்கு வரும் இரைச்சலால் அவதியுறுவது வழக்கம், அதனைப் போக்கும் வகையில் அறிமுகம் கண்டுள்ளது இப் புதிய கருவி.

மேலும் ,  அடுத்த இரண்டு வருடங்களில், கருவியை நகர்ப் பகுதிகளில் மேலும் சோதித்துப்பார்க்கத் திட்டம் உள்ளது, மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சும், தேசிய ஆய்வு நிறுவனமும் இப் புதிய திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.