Apr 28

சிவப்பு நிறத்தில் ஐபோன் 8 இந்தியாவில் வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போனில் மேட் ரெட் நிற அலுமினியம் ஃபினிஷ், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் ஐபோன் 8 ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.67,940 என்றும் 128 ஜிபி விலை ரூ.81,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.77,560, 256 ஜிபி விலை ரூ.91,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, ப்ரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரெட் எடிஷன் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நாடுகளில் ஐபோன் 8 சீரிஸ் ரெட் எடிஷன் ஏப்ரல் 13-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.

ஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.