Apr 28

ஒன்ராறியோ லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் அரசியல் இருந்து விலகல்

ஒன்ராறியோ லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான ஹர்னினர் தக்ஹார், அரசியலில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் ஏழாம் திகதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்தததோடு அரசியலில் இருந்து முழுமையாக விடைபெற போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஹர்னினர் தக்ஹார் மிசிசாகா தொகுதியில் போட்டியிட்டு, முதன்முதலில் 2007ஆம் ஆண்டில் சட்டமன்றுக்கு தேர்வானார். இதனை தொடர்ந்து அடுத்து வந்த மூன்று அமைச்சரவைகளிலும் இடம்பெற்றதுடன், அந்த காலப்பகுதியில் ஒன்ராறியோவின் போக்குவரத்து, சிறு வர்த்தகம், நுகர்வோர் சேவைகள், மற்றும் அரச சேவைகள் துறை அமைச்சராக அவர் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.

இதேவேளை லிபரல் அரசில் அங்கம் வகித்த டெப் மத்தியூஸ், லிஸ் சான்டல்ஸ், பிரட் டூகுயிட் ஆகியோரும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தமது முடிவினை ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.