Apr 27

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃHி கேமரா, ஃபிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பாலிகார்பனைட் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பு முற்றிலும் புதியதாக காட்சியளிக்கிறது. முன்பக்கம் வழக்கமான வடிவமைப்பு, ஹோம் பட்டன் மற்றும் இருபுறத்திலும் கேபாசிட்டிவ் டச் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் மால் வசதியுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் கொண்டு ஆன்லைனில் பொருட்களை வாங்கிட முடியும்.சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2018) சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 960x540 பிக்சல் qHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்

- அட்ரினோ 308 GPU

- 2 ஜிபி ரேம்

- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 2600 எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2018) ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக் மற்றும் பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இன்று (ஏப்ரல் 27) முதல் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஜெ2 (2018) விலை ரூ.8,190 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களின் மைஜியோ கணக்கில் ரூ.2750 மதிப்புடைய வவுச்சர்களை பெற முடியும். 

ஜியோ வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் வவுச்சர்களை பெற ரூ.198 அல்லது ரூ.299 சலுகையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அடுத்த 10 ரீசார்ஜ்களுக்கு ஒவ்வொரு முறையும் 10 ஜிபி அளவு கூடுதல் 4ஜி டேட்டா வழங்கப்படும்.