Apr 27

எனக்கு ஹீரோ பட்டம் வேண்டாம்: கனடா தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸ்

கனடாவில் வானை மோதி பத்து பேரை கொன்ற கொலைகாரனை கைது செய்த பொலிசார், தனக்கு ஹீரோ பட்டமெல்லாம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கனடாவில் நடைபாதையில் நடந்து சென்ற அப்பாவிகள்மீது ஒருவன் வேனை மோதிக்கொண்டே சென்றதில் பத்துபேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர்.

அவனை பொலிசார் ஒருவர் கைது செய்த விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.Ken Lam என்னும் அந்தப் பொலிசார் கையில் துப்பாக்கி வைத்திருந்தாலும், துப்பாக்கிச் சூடு நடத்தாமல், மிக லாவகமாக அந்தக் கொலைகாரனைக் கைது செய்தார்.வெறும் 37 வினாடிகளில் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது, சாலையில், வாகனங்களில் சென்ற பலரும் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளனர்,

அந்த வீடியோக்கள் வெளியானதை அடுத்து Ken Lamஐ பலரும் பாராட்டினர்.இதையடுத்து தான் தனது கடமையைதான் செய்ததாகவும் தன்னை ஹீரோ என்று புகழ வேண்டாம் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது மூத்த அதிகாரியான Peter Yuen கூறியுள்ளார்.

தான் செயல்பட்ட விதம் சரிதானா என இன்னும் கேள்வி எழுப்பும் Ken Lam, வழக்கு தொடர்பாக நீதிமன்றம் செல்லவேண்டி இருப்பதாலும், ஊடகங்களிடம் தெரிவிக்கும் எந்த கருத்தும் சாட்சியமாக பயன்படுத்தப்படக்கூடும் என்பதாலும் தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்க இயலாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.