Apr 27

ஐரோப்பாவின் புதுமை விரும்பும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சுவிஸ் நிறுவனங்கள்: ஆய்வு

ஐரோப்பாவின் புதுமை விரும்பும் பல்கலைக்கழகங்களின் Reuters தரவரிசைப்பட்டியலில் சுவிஸ் நிறுவனங்கள் ஐந்து இடம்பெற்றுள்ளன.இச்செய்தி கேட்டு சுவிஸ் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையும் பெரிய கட்டமைப்பும் ஆக்கத்திறனையும் உயர் சிறப்பையும் ஊக்குவிப்பதாக உயர் கல்விச் சமூகம் புகழ்ந்துரை ஆறியுள்ளது

.Reuters தரவரிசைப் பட்டியலில் சுவிஸ் நாட்டின் இரண்டு அரசு தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

The Federal Institute of Technology Lausanne (EPFL) நான்காவது இடத்தையும், Federal Institute of Technology Zuriche (ETH Zurich) பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது பெல்ஜியத்திலுள்ள KU Leuven, மூன்றாவது முறையாக அது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.2018 ஆம் ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் 23 ஜேர்மன் பல்கலைக்கழகங்கள் 23 இடங்கள் முன்னேறியுள்ளன.

இவ்வகையில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, அதன் ஐந்து பல்கலைக்கழகங்கள் எட்டு இடங்கள் முன்னேறியுள்ளன.இதற்கு நேர் எதிராக 21 பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 35 இடங்கள் கீழிறங்கியுள்ளன.இதற்கு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது

Swiss Universities என்னும் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Martina Weiss கூறும்போது சமுதாயத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி சுவிஸ் பல்கலைக்கழகங்கள் புதுமைக்கு வித்திடுவதில் முக்கிய காரணியாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

புதுமையை ஏற்படுத்தும் நமது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டதற்கு ஒரு அடையாளமாக இந்த பட்டியலில் நமது பள்ளிகள் இடம்பெற்றுள்ளதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்தார்.