Apr 27

சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடா பிரதமர் மீது குற்றச்சாட்டு

கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடே, இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேனை மேற்கோள்காட்டி இந்த செய்தியை கனடாவின் இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஜஸ்ட்டி ட்ரூடேவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.