May 23

டிரம்ப் அதிபரானதற்கு வருந்துகிறார் டுவிட்டர் இணை நிறுவனர் தகவல்

டிரம்ப் அமெரிக்க அதிபரானதற்கு 'டுவிட்டர்' சமூகவலைதளம் மிகப்பெரிய பங்கு வகித்தது என்பது உண்மை என்றால், அதற்காக வருந்துகிறேன், என அதன் இணை நிறுவனர் இவான் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபரானதில் டுவிட்டரின் பங்கு மிக முக்கியமானது, என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக டுவிட்டர் தளத்தின் இணை நிறுவனர் இவான் வில்லியம்ஸ், ''டிரம்ப் கூறியதுபோல் டுவிட்டர் இல்லாவிட்டால் அவர் அமெரிக்க அதிபர் ஆகியிருக்கமாட்டார் என்பது உண்மையெனில் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகை படுத்துவதால் இணையவெளி இன்று சின்னா பின்னமாகிக் கிடக்கிறது. மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பறிமாற ஒரு தளம் இருந்தால் உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும் எனத் தான் எண்ணியது தவறோ என எண்ணுகிறேன்" என்றார்.