Apr 26

பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!

மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தின் பெயர் விரைவில் மாற்றபட உள்ளதாக இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்

நேற்று புதன்கிழமை இந்த தகவலை இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும், இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து தலைவருமான Valérie Pécresse அதிவித்துள்ளார். La station Europe தொடரூந்து நிலையத்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முதல் பெண் ஜனாதிபதியான Simone Veil இன் பெயர் சூட்டப்பட உள்ளது.

Simone Veil இனை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவரின் நினைவாகவும், 'Europe- Simone Veil ' என இந்த மெற்றோ நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக Valérie Pécresse தெரிவித்துள்ளார்.