May 23

சசிகலாவுடன் சந்திப்பு ஏன்?: ஜெயகுமார் விளக்கம்

''சசிகலாவை யாரும் கட்சி ரீதியாக சந்திக்கவில்லை; தனிப்பட்ட முறையில் தான் சந்தித்தனர்,'' என, நிதி அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யில், உணவு வகைகளுக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக மாணவர்களை, 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், கல்வித் துறை பல 

நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில், எங்கள் தரப்பில் பேச தயாராக உள்ளோம் என, கூறிவிட்டோம். 

காலத்தின் சூழல், இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது; அவர்கள் பேச முன்வர வேண்டும். சசிகலாவை, கட்சி ரீதியாக யாரும் சந்திக்கவில்லை; தனிப்பட்ட முறையில் சந்தித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.