Apr 25

கனடாவில் 9 பேரை வாகனத்தால் மோதிக் கொன்ற ஆசாமி கைது!

கனடாவில் வட டோரோன்டோவிலுள்ல மிகவும் பரபரப்பான "யோங்கோ ஸ்திரிட்" பகுதியில் பொதுமக்கள் மீது  வாகனமோட்டி ஒருவர் வாகனத்த்தினால் மோதி  உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவமானது பிஞ்ச் அவெனியூ பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர் என போலீஸ் தகவல் கூறுகின்றது.

உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் வெள்ளை நிற வாகனத்தில் விரைந்து வந்த அந்த காரோட்டி பொதுமக்கள் மீது மோதியுள்ளார். விபத்துக்குரிய வாகனம் மற்றும் அதன் ஓட்டுனரான அலெக் மினாசியன் (வயது 25) என்பவர் உடனடியாக கைது செய்துள்ளதாக கூறும் போலீசார், விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விபத்து குறித்து கண்காணித்து வருவதாகவும் சம்பவத்தின் போது முதலில் உதவிக்கு வந்த பொதுமக்களை பாராட்டுவதாகவும் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 7  பேர் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.