Apr 25

கனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

கனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே, பாதுகாப்பபு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோவும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த உடன்பாட்டின் படி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கனடாவில், ஜப்பானில் அல்லது உலகின் எந்த பகுதியிலாவது மேற்கொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சிகளின் போது, தமக்கிடையே இராணுவ உபகரணங்களை பகிர்ந்து கொள்வதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.