May 23

பூர்வகுடியினருக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய தொழில்வாய்ப்புக்கள் , தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன

கனடாவின் தொழில் அமைச்சு தனது திணைக்கத்தின் கொள்கைளையே சரிவரக் கடைப்பிடிக்காமையால், கனேடியப் பூர்வகுடியினருக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய தொழில்வாய்ப்புக்கள் , தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கனேடியக் கணக்காய்வாளர் நாயகம்  Michael Ferguson கண்டறிந்துள்ளார்.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிக்கமர்த்தப்பட முன்னதாக  அவ்வெற்றிடங்கள்,  குறைவான வருமானம் பெறும் சிறுபான்மைக் கனேடியக் குழுவினரைக் (under-represented groups) கொண்டு நிரப்பப்பட முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அத்தகைய முயற்சிகள் வெற்றியளிக்கப்படாதவிடத்திலேயே  தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிக்கமர்த்தப்படலாம்.

ஆயினும் 65% ஆன வேலைகொள்வோர், இச்சட்டத்திற்கமைய நடக்காத போதும், இந்த வெற்றிடங்களுக்கு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணிக்கமர்த்த தொழில் அமைச்சினால் வேலைகொள்வோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம்   தெரிவித்துள்ளார்.

பணி வெற்றிடங்களை நிரப்பும்போது கனேடியர்களுக்கே முன்னுரிமை வழங்கபடவேண்டும் என்பதில் தமது அரசு உறுதியாய் உள்ளதாக தொழில் அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு தெரிவித்துள்ளார்.