May 23

50% அதிகமான பழமைவாதக் கட்சி அங்கத்தவர்கள் வாக்களித்துள்ளனர்.

பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நெருங்கிவரும் இந்நிலையில் 50% அதிகமான பழமைவாதக் கட்சியின் அங்கத்தவர்கள்  தமது வாக்குகளை அளித்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஏறத்தாள 125,000 அங்கத்தவர்கள் தமது வாக்குகளை அளித்துவிட்டதாக கட்சியின் வாக்குகளை எண்ணும் கணக்காய்வு நிறுவனமான Deloitte Canada அறிவித்துள்ளது.

வாக்குகள் அளிக்கப்பட இன்னம் ஒரு வார காலமே இருக்கும் இந்நிலையில், அளிக்கப்பட்ட இந்த வாக்குகளின் எண்ணிக்கை 48 %  எனத் தெரிவிக்கப்படுகிறது.

2004 ஆம்  ஆண்டில் ஸ்டீபன்  ஹார்ப்பர்  பழமைவாதக் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டபொது அளிக்கப்பட வாக்குகளை விட தற்போது அளிக்கப்பட்டுள்ள வாக்குகள் அதிகமாகும். 2004 ஆம் ஆண்டு 37 வீதமான கட்சி அங்கத்தவர்களே  கட்சித் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.