Apr 24

பிளாஸ்டிக் வீட்டை கட்டியுள்ள கனடியர்

கனடாவைச் சேர்ந்த ரொபர்ட் பெஸூ எனப்படும் பிரபலம் உலகிலேயே முதலாவது பிளாஸ்டிக்கால் ஆன மாளிகையைக் கட்டி முத்திரை பதித்துள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களினால் சூழல் மாசு மற்றும் கடல்வாழ் உயிரிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராக ரொபர்ட் பெஸூ அதில் இருந்து தவிர்த்துக் கொள்ள கழிவுப் பிளாஸ்டிக்கை மீள் உபயோகப்படுத்தும் திட்டத்தினை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் வீடுகளைக் கட்ட ஆரம்பித்த அவர் பனாமாவில் பிரமாண்டமான பிளாஸ்டிக் வீடு ஒன்றினைக் கட்டி சாதித்துள்ளார்.

பிளாஸ்டிக் மன்னன் என்ற அடைமொழிப் பெயர் கொண்டுள்ள ரொபர்ட் பெஸூ வீசப்படும் பிளாஸ்டிக் கொண்டு உறுதியான வீடுகளை அமைக்க முடியும் என்பதை நடைமுறையில் செய்து காட்டியுள்ளார்.

சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு எதிராக பிளாஸ்டிக் மூலம் ஒரு கிராமத்தையே உருவாக்கிவரும் ரொபர்ட் பெஸூ இந்தத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் சிறப்பு விருது ஒன்றினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கட்டியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாளிகையானது சுமார் 40000 பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதோடு, நான்கு அடுக்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்