Apr 23

பணி பகிஷ்கரிப்பில் தொடரூந்து, விமான ஊழியர்கள்! - போக்குவரத்து நிலவரம்!

இன்று திங்கட்கிழமை, SNCF தொழிலாளர்கள் ஐந்தாம் கட்ட இரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த இந்த பணி பகிஷ்கரிப்பு, புதன்கிழமை காலை 7.55 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களைப்போல போக்குவரத்து தடைப்படாது என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TGVக்களில் 35 வீதமானவையும், Intercités களில் 30 வீதமானவையும், TER மற்றும் RER (அனைத்து வழி) சேவைகளில் 40 வீதமானவையும் இயங்கும்.

இன்று ஏப்ரல் 23 மற்றும் நாளை ஏப்ரல் 24 ஆகிய திகதிகளில் ஐந்தாம் கட்ட ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. இந்த இரு நாள் ஆர்ப்பாட்டமானது பகுதி பகுதியாக ஜூன் மாதம் வரை இடம்பெற உள்ளது என முன்னதாக தொழிற்சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தவிர, எயார் பிரான்ஸ் ஊழியர்களும் இன்று திங்கட்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கான சம்பளத்தில் 6 வீதம் உயர்வை கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு, 1.8 வீதத்தால் அதிகரிக்க முடியும். 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் படிப்படியாக சம்பள உயர்வு ஏற்படுத்தித்தரமுடியும் என அறிவித்துள்ளது.