Apr 23

பாகுபாட்டுக் கருத்துக்கள் [Discriminative comments] கண்டிக்கப்பட வேண்டியவை

சமூக ஆர்வலர் குயின்ரஸ் துரைசிங்கம் ஒரு வருடத்திற்கு மேலாக தயார்படுத்தி பல்லின சமூகத் தலைவர்களினதும் ஆதரவைப் பெற்று Scarborough-Guildwood நியமனத் தேர்தலிற்காகக் காத்திருந்தார்.

அதிலும் 2,000 வரையான தொகுதி வாசிகளை அங்கத்துவர்களாக இணைவதற்குக்கு கூட கட்சி சார்ந்த நியாயப்பாடுகளை எடுத்துரைத்து அவர்கள் அங்கத்துவர்களாகவதற்கு காத்திருந்தனர்.

இந்த நிலையில் றொசான் நல்லரத்தினம் இந்தத் தொகுதிக்கான வேட்பாளராக தேர்தல்களின்றி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

ஆனால் றொசான் நல்லரத்தினம் தமிழ்ச் சமுகத்தின் மீதான நற்பார்வை குறித்த கருத்துக்களைத் தெரிவிக்காமல் மிகவும் பாகுபாடான [Discriminative comments]  கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வயதானவர்கள் அரசியலை விட்டு விலக வேண்டும் என்ற குறிக்கோளையே அவர் கீழேயுள்ள video பதிவில் தெரிவித்திருந்ததாலும் அதற்கான அவர் உபயோகித்த பதமான “Uncles” என்பது தமிழில் “மாமாக்கள்” எனப் பொருட்படும்.

இது கனடிய மனிதவுரிமைச் சாசனத்தின் பிரகாரம் ஒரு வயதுப் பாகுபாடான விடயமாகக் கருதப்படும். அது கூட சட்ட அமுலாக்கல் துறைசார் பதவிகளில் இருப்போர் இவ்வாறான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில்லை.

இந்த காணொளியில் தன்னை ஒரு பொதுமகனாகக் காட்ட முனையும் றொசனிற்கு பல சாதகமான தன்மைகள் “பல ஆயிரம் அப்பாவி தமிழர்களையும் விட” இருக்கின்றது என்பதை அவர் மறந்து விட்டார். கந்தசுவாமி கோவிலில் தனது மனைவியின் நடன வகுப்புக்களை வைக்கும் அளவிற்கோ அல்ல அந்தக் கோவிலிற்கு அரசியல் வாதிகளைக் கூட்டிச் செல்லுமளவிற்கோ அவருக்கு “பல ஆயிரம் தமிழர்களை” விட சிறப்புரிமை இருக்கின்றது. அல்லது அந்த ஆலயத்தின் மீது ஆதிக்கம் இருக்கிறது.

இருந்தபோதும் ரொறன்ரோப் பொலிஸ் சேவையில் கடந்த 10 வருடங்களாக சிப்பாயாகப் “Constable” பணியாற்றி வரும் றொசான் நல்லரத்தினம் இவ்வாறான “Uncles தமிழில் “மாமாக்கள்” என பாகுபாட்டுக் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக தமிழ்ச் சமுதாயத்திடம் மன்னிப்புக கோருவதே அவரின் வெற்றிக்காக நாங்கள் உழைப்பதற்காக உதவும்.

தவறுகள் களையப்பட்டால் நாங்கள் அவரை ஆதரிப்போம்! பகிரங்கமாக தான் இவ்வாறு மேற்கொண்ட பாகுபாட்டுப் பதிவுகள் [Discriminative comments] தவறானவை என்பதை அவர் ஒப்புக்கொள்ளட்டும்.