Apr 23

செய்யாத குற்றத்திற்காக 11 வருடங்கள் சிறையிலிருந்த கனடாவாசி

கனடா பிரஜையான பஷீர் மக்தல் என்பவர் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு செய்யாக குற்றத்திற்காக 11 வருடங்கள் எத்தியோப்பியாவில் சிறைவாசமிருந்து மீண்டு வந்துள்ளார்.

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற்கு ஆளான இவருக்கு எத்தியோப்பிய அரசு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில் கனடா அதிகாரிகளின் பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவில் பிறந்து அகதியாக கனடாவிற்கு வந்த இவர் குடியுரிமை பெற்று நிரந்தரமாக அங்கேயே தங்கினார். எனினும் சில காலம் கழித்து அங்கிருந்து வியாபார நிமித்தமாக கென்யா சென்ற மக்தல் அங்கு ஆடை வியாபாரம் செய்து வந்தார். 2006 இல் சோமாலியாவில் பணியாற்றிய இவர் எத்தியோப்பியப் படைகளிடம் மாட்டிக்கொண்டார். அதன் பின் நாடு கடத்தப்பட்ட மக்தல் 2009 இல் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார்.

மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் அவர் மீதான குற்றங்கள் நியாயமற்றது என்று அவரது வழக்கறிஞர் மற்றும் கனடா அதிகாரிகள் அவரை எத்தியோப்பிய சிறையிலிருந்து விடுதலை செய்தனர்.