பஸ்சுக்குள் தமிழர் செய்த காரியம்!
நான்கு இளம் பெண்களை TTC பேருந்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய குற்றச் சாட்டில் 47 வயதான கேதிஸ்வரன் சண்முகநாதன் என்பவர் கைதாகியுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் திகதிகளில்
5 மணி நேரத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாக
விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் , பஸ்களில் பெண்களுக்கு பின்னால் நின்று அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 10 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில், 15 வயது பெண் பிள்ளையொருவரை அந்நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
அதேபோல், ஏப்ரல் 11 ஆம் திகதியும் பெண்ணொருவரை துன்புறுத்தியுள்ளார்.
அவரது குற்றங்களின் சி.சி.டிவி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.