Apr 20

சுவிட்சர்லாந்தை தாக்கும் அரிய வகை தொற்று

Rodent plague எனப்படும் ஒருவகை பாக்டீரியா தொற்று சுவிட்சர்லாந்து மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதற்குக் காரணமான உண்ணி கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது குப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மத்திய சுகாதார அலுவலகம் 130 பேருக்கு tularemia நோய் இருப்பதை உறுதி செய்திருந்தது. இது பொதுவான எண்ணிகையை விட நான்கு மடங்கு அதிகம்.

அத்தகைய சந்தர்ப்பங்கள் அனைத்தையும் மருத்துவர்கள் அறிக்கையிட வேண்டும் என அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம், என வல்லுநர்கள் கூறும் அதேவேளை இந்நோயை விரைவில் கண்டறியாவிடின் அது ஆபத்தாகிவிடும் எனவும் கூறுகின்றனர்.

இந்த நோய், முயல்கள் மற்றும் பிற காட்டு மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவுவதைக் காட்டிலும், நோய் தாக்கப்பட்ட விலங்கு திசுக்கள் உடனான தொடுகை மற்றும் உண்ணி கடி மூலமே மனிதர்களுக்கு பரவுகிறது என தெரியவந்துள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசை வலி, வீங்கிய நிணநீர் முனைகள் மற்றும் தோலில் சிவப்பு புள்ளிகள் ஆகியவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகள்.