இன ரீதியான விவகாரங்கள் தொடர்பில் சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் விடுவிப்பு
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், நைஜீரிய நபர் ஒருவரின் உயிர் மற்றும் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளை, சூரிச் நீதிமன்றம் ஒன்று விடுவித்தது.
2009 ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றில் இனவெறியை தூண்டியதாக, 45 வயதான நைஜீரியர் ஒருவர் போலீசார் மீது குற்றஞ்சாட்டியிருந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் கடந்த புதன்கிழமையன்று நிராகரித்தது.
இதய கோளாறு உள்ள அந்த நைஜீரியர் மீது, போலீசார் மிளகு ஸ்ப்ரே அடித்து தாக்கியதாக அவர் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
சம்பவம் நடந்த அன்று மூன்று கருப்பின டிராம் பயணிகளை சோதனையிட்ட போது, 45 வயதான நைஜீரிய நபர் தங்களை தாக்கியதாகவும், அவரிடமிருந்து தம்மை பாதுகாக்க வேண்டியிருந்ததாகவும், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.