Apr 20

கனடாவில் நிலநடுக்கம்!

தென் – மேற்கு ஒன்ராறியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதுடன் , Amherstburg, Ont., south of Windsor, பகுதியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த நடுக்கம் அமெரிக்காவின் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களிடம் அழைப்புகள் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.