Apr 19

விண்ணிற்கு வெற்றிகரமாக விரைந்தது TESS செயற்கைக்கோள்

சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதற்கான நாசாவின் TESS செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஃபுளோரிடாவின் கேப் கெனரவலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் 9 ராக்கெட் மூலம், அந்நாட்டு நேரப்படி மாலை 6.51 மணிக்கு ராக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டது.

புவி வட்டப் பாதையில் செயற்கைக் கோளை நிலைநிறுத்தி விட்டு, ராக்கெட்டானது அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்களாக உள்ளனவா? என்று இந்த செயற்கைக்கோள் ஆராயும் என்று நாசா ஏற்கெனவே கூறி இருந்தது.