Apr 19

பிரான்ஸில் எரியூட்டப்படும் கார்கள்!

கடந்த சில நாட்களாக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களால் Toulouse நகரில், ஏப்ரல் 17 இரவும் காவற்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக் கலவரத்தில் 29 கார்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

துலுசின் Reynerie நகரில் செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாவது நாளாகக் கூடிய முகமூடி அணிந்த இளைஞர்கள் பலர், வீதிகளில் அதாவது வீட்டின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்து, பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீதும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். திங்கட்கிழமை இரவு 25 வாகனங்கள் எரியூட்டப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 29 வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் 200 காவல்துறையினர் குவிக்கப்பட்டதோடு, உலங்குவானூர்தியும் வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்களை அடக்கினர்.  இச் சம்பவம் தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.