Apr 19

பெரும்பாலான சுவிஸ் தொழில் பயிலுனர்கள் விரைவாக வேலை பெறுகின்றனர்

வேலை பயிற்சி பெற்ற சுவிஸ் பட்டதாரிகளில் 85% பேர் மூன்று மாதங்களுக்குள் வேலை கிடைக்கப் பெறுகின்றனர். அவர்களில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டோர், அவர்களை பயிற்றுவித்த முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

சுவிஸ் ஃபெடரல் புள்ளிவிவர அலுவலகம் (FSO) நடத்திய ஒரு நீண்ட கால ஆய்வில் மூன்று மாதங்களுக்குள் பெரும்பாலானவர்களுக்கு வேலைகள் கிடைத்தாலும், சில பட்டதாரிகளுக்கு இரண்டு அல்லது ஒரு வருடங்களின்பின் தான் வேலை கிடைக்கிறது. இருப்பினும் 19% பேர் வேலையில்லாதவர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2012 மற்றும் 2015 க்கு இடையில், மேல்நிலை பள்ளி சான்றிதழ் வைத்திருக்கும் 89,000 பேரின் வாழ்க்கை பாதையை FSO ஆய்வு செய்தது.

சுகாதார துறையில் பயிற்சி பெறும் பட்டதாரிகள் அதே துறையில் விரைவில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.