Apr 19

சுசானாவுக்கு கனேடிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு!

இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யா பங்கேற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா ஆகிய மூன்று இளம்பெண்கள் தேர்வாகியிருந்தனர்.

இதனால் நேற்றைய இறுதி போட்டியில் ஆர்யா, இவர்களில் ஒருவரை தனது வருங்கால மனைவியாக ஏற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்வையாளர்கள் ஏமாற்றம் தரும் வகையில் தனது முடிவை அறிவித்தார்.

யாரையும் திருமணம் செய்ய அவர் தெரிவுசெய்யவில்லை.

அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க.

நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!” இவ்வாறு ஆர்யா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கனேடிய தமிழர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்தார் சுசானா.

அவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய தமிழ்ப் பெண்.

யாழ்ப்பாணம் அனைலைதீவு பகுதியில் உள்ள சுசானாவின் வீட்டிற்கும் ஆர்யா சென்றிருந்தார்.

இதன்போது சுசானாவின் உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து பெண்களுடன் பழகியது போலவே, சுசானாவுடனும் பழகியிருந்தார் ஆர்யா.

சுசானா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு 6 வயதில் பிள்ளையும் உள்ளது. இதனைத் தெரிந்தே ஆர்யா அவருடன் பழகியிருந்தார்.

ஆனால் நேற்றைய இறுதி நாளில், அவர் யாரையும் தேர்வுசெய்யாமை சுசானாவின் தந்தையை ஆத்திரப்படுத்தியிருந்தது.

கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் கூறியதாவது; ” மூன்று மாதங்களுக்கு மேல் என் மகளை பிரிந்து இருந்தேன். அவளின் மகன் தாயை பிரிந்து இருந்தான்.

மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் கனடாவில் இருந்து வந்திருந்தோம். ஆனால் இறுதியில் உங்களின் முடிவு சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

என் மகள் மிகவும் அமைதியானவள். நல்ல பாசமானவள். அவளை பிரிந்து இருந்த நாட்கள் மிகவும் கடினமானவை. இதெல்லாம் உங்களுக்கு எங்கு புரிய போகிறது. நீங்கள் உண்மையாகவே திருமணம் செய்யத்தான் இந்நிகழ்ச்சிக்கு வந்தீர்களா ? இல்லை மேலும் இதை ஒரு தொடர் போல கொண்டு போவீர்களா?” என்று கோபமாக ஆர்யாவை பார்த்து கேட்டார்.

பெற்றோரின் வேதனையை உணர்ந்த ஆர்யா அவரை சமரசம் செய்ய முயன்றார். அனால் அவர் ஆர்யா மீதும் அந்த தனியார் சனல் மீதும் அளவு கடந்த வெறுப்பில் இருந்தார்.

 ஏற்கனவே இந்த நிகழ்ச்சி மேல் கோபத்தில் இருந்த தமிழர்களை, குறிப்பாக கனேடியர்களை மேலும் ஆத்திரப்படுத்தியது.

இந்நிகழ்ச்சி மட்டுமன்றி, ஈழத்துப் பெண்ணொருவர் இவ்வாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை தொடர்பில் தமது அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இந்நிகழ்ச்சி தொடர்பில் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர், கனேடிய தமிழர்கள்.

ஆர்யா, அந்த தொலைக்காட்சி மட்டுமன்றி சுசானாவையும் விமர்சித்து வருகின்றனர் பலர்.