Apr 18

கைதுசெய்யப்பட்ட நாய் : கண்ணீர் விட்ட உரிமையாளர்

ஒன்ராறியோவின், கெனோராவில் மரையொன்றை விரட்டிய நாயொன்று கைதுசெய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நாயை, அதன் உரிமையாளர்கள், வோக்கிங் கூட்டிச் சென்றுள்ளனர். இடை நடுவே அதனை பிடியிலிருந்து விடுவித்துள்ளனர்.

இதன்போது அந்த நாய் ஓடிச் சென்றுள்ளது. உரிமையாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் நாயைத் தேடியுள்ளனர்.

எனினும் அது கிடைக்கவில்லை. ஆனால் சற்று நேரத்தில் பொலிஸிடமிருந்து அழைப்பொன்று வந்துள்ளது.

இதில் நாய் தம்மிடம் இருப்பதாகவும், அது செய்த குளறுபடி காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரிமையாளர்களிடமிருந்து ஓடிச்சென்ற நாய் மரையொன்றை துரத்திச் சென்றுள்ளது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் நாயை கைதுசெய்துள்ளனர்.

பின்னர் அதனை அவர்களது காரிலேயே கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர்.

நாயை பொலிஸ் காரில் கண்டதுடம் , தனக்கு சிரிப்பு வந்த போதிலும், தான் அழுதே விட்டதாக அதன் எஜமான் தெரிவித்துள்ளார்.