Apr 18

புதிய நிறத்தில் அசத்தும் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் கோல்டு என இரண்டு நிறங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

அந்த வகையில் கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே எனும் புதிய நிறத்தில் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2960x1440 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 சீரிஸ் 8895 பிராசஸர்

- மாலி-G71 MP20 GPU

- 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, f2.4 அப்ரேச்சர்

- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர்

- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

- 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

- 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே வேரியன்ட் ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் வலைத்தளம் மற்றும் சாம்சங் ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் புதிய நிறத்தில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 8 விலை ரூ.67,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு பேடிஎம் சார்பில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.