Apr 18

ரொரன்ரோவில் கடும் பாதிப்பு

ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நிலவும் கடுமையான உறைபனி மழை மற்றும், பலத்த காற்றுடன் கூடிய வானிலையால் ஆயிரக்கணக்கானோருக்கான மின் விநியோகம் இன்னமும் தடைபட்டுள்ளது.

ரொரன்ரோ ஹைட்ரோ இறுதியாக வெளியிட்ட தகவலின்படி, ரொரன்ரோவில் இன்னமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசமாக இருந்த வேளையில் சுமார் 44,000 பேர் வரையில் மின் வினியோகம் இனறி இருந்ததாகவும், தற்போது படிப்படியாக நிலைமை சிர் செய்யப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

மின் வினியோக வடங்கள் அறுந்து தொங்குவது குறித்தும், மின் கம்பங்கள் வீழ்ந்துள்ளமை தொடர்பிலும் தமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாக ரொரன்ரோ காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சுமார் 67,000 வாடிக்கையாளர்கள் மின் தடையை எதிர்கொண்டதாக ஹைட்ரோ வண்ணும் தெரிவித்துள்ளது.

விமானப் பயணங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கத்தினை விடவும் நெருக்கடியான நிலைமை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள ரொரன்ரோ பியர்சன் வானூர்தி நிலைய நிர்வாகம், பயணிகள் தமது பயணங்களை முன்கூட்டியே உறுதிப்படுததிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.