Apr 18

பிரான்ஸ் ஜனாதிபதியின் ஐரோப்பிய நாடாளுமன்ற விஜயம்!

பிரான்ஸ் ஜனாதிபதி ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய சட்டமன்ற உறுப்பினர்களுடன் விவாதமொன்றில் கலந்துக் கொள்வதற்காக விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு நேற்று (ஏப்ரல் 17) சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை, ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வரவேற்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி உரையாற்றும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்த தனது நோக்கம் குறித்து எடுத்துரைத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவில் டூமா நகரில் பொதுமக்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையில் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதியின் இவ்விஜயம் அமைந்துள்ளது.

சிரியா மீதான இராணுவ மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், விவாதத்தின்போது சிரியா மீதான பிரான்ஸின் இராணுவ நடவடிக்கைகள் விவாதத்திற்கு உள்ளாளானதாகக் கூறப்படுகிறது.