Mar 12

25 இலட்சம் செலவில் கல்குடாவில் இரு வீதிகள் திறப்பு

இரண்டரை மில்லியன் ரூபா   செலவில்  கல்குடா தொகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இரண்டு வீதிகள் திறந்து வைக்கப்பட்டன.

நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர்  கேபி எஸ் ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டனர்,

இதன் போது ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபை காவத்தமுனையில் கொங்கிரீட்யிடப்பட்ட ஹிஸ்புள்ளா வீதியை  முதலமைச்சர் மக்கள் பாவனைக்காக திறந்து  வைத்தார்.

அத்துடன்  ஓட்டமாவடி மஜ்மா நகர் வீதி ஒன்றரை மில்லியன்ரூபா செலவில் கொங்கிரீட்வீதியாக புனரமைக்கப்பட்டு  மக்களின் பாவனைக்காக  கையளிக்கப்பட்டது.