Apr 17

பிரெஞ்சு மக்களே கோடைகால கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்!

பல குளிர் நாட்களிற்கு பிறகு வரும் வசந்த காலத்தை எதிர் கொள்ளத் தயாராகுங்கள்.

கோடைகாலத்தில் ஏற்படும் கடும் வெப்பத்தை பிரெஞ்சு மக்கள் முன்னதாகவே உணர உள்ளனர். பிரான்ஸில் 30° c வரையான கடும் வெப்பம் இந்த வாரத்தில் ஏற்பட உள்ளது. France early taste summer hit 28C

நாளை (April 18) நாடு முழுவதும் 25°c வெப்பமும், பிரான்ஸின் பல பகுதிகளில் 30°c வெப்பமும் நிலவும் எனவும், இவ்வருடத்தில் பதிவாகும் முதல் 30°c வெப்பம் இதுவெனவும் தெரிவிக்கப்படுள்ளது.

தவிர, இதே வெப்பம் மறுநாள் வியாழக் கிழமையும் நிலவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கோடைகால ஆரம்பம் வரை சராசரியாக 9 – 12°c வரையான வெப்பம் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு வானிலை ஆய்வு மையத்தினால் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பரிஸுக்குள், வரும் புதன்கிழமை அதிகபட்சமாக 27°c வெப்பம் நிலவும் எனவும், அது வியாழக்கிழமை வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.