Apr 17

ஜெனீவாவில் நீண்டகாலமாக தாமதமான, சர்ச்சைக்குரிய ஆர்மேனிய நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது

1915-1917 வரை இடம்பெற்ற அர்மேனிய இனப்படுகொலையை நினைவுகூறும் முகமாக, தெரு விளக்குகளின் நினைவுத் தொடர் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. துருக்கிய குழுக்கள் இதனை தவறான செயல் என்று விபரித்துள்ளன.

“நினைவுத் தெரு விளக்குகள்” கடந்த வெள்ளியன்று சுவிட்சர்லாந்து சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கான தற்போதைய அர்மேனிய தூதர் Charles Aznavour, மற்றும் இந்த நினைவுச் சின்னங்களை வடிவமைத்த கலைஞர் Mélik Ohanian உட்பட பலர் கூடியிருந்தனர்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ட்ரம்ப்லே பூங்காவில் பேசுகையில், Charles Aznavour, “இந்த நினைவுச்சின்னம் கடந்தகால நிகழ்வு பற்றிய நினைவூட்டல் மட்டுமல்ல, இதுபோன்று மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதற்கான ஒரு நினைவுச்சின்னமும் கூட” என்றார்.