Mar 11

பாக். தீவிரவாத நாடு அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு

அமெரிக்காவில் தற்போது டொனால்டு ட்ரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கட்சியின் மூத்த எம்.பி. டெட் போ, அந்த நாட்டு நாடாளுமன்ற தீவிரவாத தடுப்பு குழுவின் தலைவராகவும் உள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டெட் அண்மையில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் எதிரிகளுக்கு தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நீண்டகாலமாக ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானை நட்பு நாடாக அமெரிக்கா கருதுகிறது. ஆனால் அந்த நாடு நம்பிக்கை துரோகம் செய்து வருகிறது.

அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. ஆப்கானிஸ் தானில் நாச வேலைகளில் ஈடுபடும் ஹக்கானி குழுவுக்கும் அந்த நாடு ஆதரவு அளித்து வருகிறது.

எனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருக்கும் நட்பு நாடு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். அந்த நாட்டை தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்