Apr 16

கடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு அதிகாரிகள் கடிதம்

காஷ்மீர் மற்றும் உ.பி., பலாத்கார சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற சிவில் துறை அதிகாரிகள் 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில், "மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறி விட்டது. நமது அரசியலமைப்பில் உள்ள மதசார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை சரிவடைந்துள்ளன. 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது நாம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 

சுதந்திரத்திற்கு பிறகு இது இருள் சூழ்ந்த நேரம். இதற்கு நமது அரசும், அரசியல் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும். அரசு தனது கடமையை செய்ய தவறி விட்டது என்பதையே இது காட்டுகிறது". இவ்வாறு அந்த கடிதத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.