Apr 16

பரிஸில் பிரபல நடிகையிடம் கொள்ளை!

ஃபஷன் ஷோ ஒன்றிற்கு வந்த பிரபல அமெரிக்க நடிகை ஒருவரிடமிருந்து நகைகளை கொள்ளையிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் Cote dAzur இல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian கடந்த ஒக்டோபர் 2016 ஆம் ஆண்டு, பரிஸில் நடைபெற்ற ‘ஃபஷன் ஷோ’ நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அச் சமயம் அவரிடமிருந்து 9.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இந்த கொள்ளை வழக்கியில் தொடர்ச்சியாக பலரை கைது செய்திருந்த போதும், தற்போது 28 வயதுடைய மிக முக்கியமான குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

‘ஆயுதத்துடன் கொள்ளை’, ‘ஆட்கடத்தல்’, ‘குற்றவியல் சதி’ போன்ற வழக்குகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பத்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.