Apr 16

சிறப்புத் தள்ளுபடி விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை!

அமீரகத்தில் புனிதமிகு ரமலானில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை!

எதிர்வரும் மே மாதம் மத்தியில் துவங்கவுள்ள புனிதமிகு ரமலானை முன்னிட்டு அமீரகம் முழுவதுமுள்ள 600க்கு மேற்பட்ட ஹைப்பர், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் ஸ்டோர்களில் 25% முதல் 50% வரை சுமார் 10,000க்கு மேற்பட்ட உணவு மற்றும் மளிகை பொருட்களின் மீது சிறப்பு தள்ளுபடியை அமீரக பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர் பாதுகாப்பு இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் போன்றோருடன் கலந்தாலோசணைகள் செய்யப்பட்டும் வருகின்றன. கோ-ஆபரேட்டிவ் ஸ்டோர்களில் இந்த வருடமும் 2 வகையான உணவுப் பரிசுக்கூடைகள் 2 வகையான விலைகளில் விற்கப்படவுள்ளது.

புனித ரமலானுக்கு பயன்படும் உணவுப் பொருட்களை கொண்ட 1 வகை பேக்கேஜ் 100 திர்ஹமும், இன்னொரு வகை பேக்கேஜ் 200 திர்ஹத்திற்குள்ளும் விற்பனை செய்ய படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ‘வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இயக்குனரகத்திற்கு’ புகார் அளிக்க விரும்புவோர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள 600-522-225 or by email at [email protected] ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்