Apr 16

மகாதீர் போட்டியிட போகும் புதிய நாடாளுமன்ற தொகுதி..!

மலேசியாவில் எதிர் வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

நாட்டில் 22 ஆண்டு காலம் பிரதமராக பணியாற்றிய துன் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் ஏற்பட்ட பிரச்னையால் அம்னோவிலிருந்து வெளியேறி பெர்சாத்து கட்சியைத் தொடங்கி நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்து அதற்கு தலைவராகவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெர்சாத்து கட்சியின் முக்கிய ஆவணங்களை வழங்கும்படி தேசிய சங்கப்பதிவிலாகா உத்தரவிட்டும் குறுகிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாததால் அதன் பதிவு இடைக்காலமாக ரத்து செய்யப்பட்டது.

மலேசியாவில் எதிர் வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

நாட்டில் 22 ஆண்டு காலம் பிரதமராக பணியாற்றிய துன் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் ஏற்பட்ட பிரச்னையால் அம்னோவிலிருந்து வெளியேறி பெர்சாத்து கட்சியைத் தொடங்கி நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்து அதற்கு தலைவராகவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பி.கே.ஆர். சின்னத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்து கட்சிகளும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளன.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை லங்காவி அனைத்துலக விமான நிலையத்தின் அருகாமையிலுள்ள திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 92 வயதான துன் மகாதீர் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியின் இடைக்கால பிரதமராக அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றால் துன் மகாதீர் அந்த தொகுதியை கைப்பற்றியாக வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.