Apr 15

வவுனியா பொலிஸாரின் காவலரன் மீது தாக்குதல்

வவுனியா நகரில் போக்குவரத்து பொலிஸாரின் காவல் அரன் சேதம்

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்படும் போக்குவரத்து பொலிஸாரின் காவல் அரன் இன்று (15.04.2018) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸார் காவல் அரன் மீது CT-100,பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் அதனை தூக்கி அருகே வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் சி.சி.ரி.வி காணொளி உதவியுடனும் விசாரணைகளை மேற்கொள்ளுவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.