May 22

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை சரிந்ததா?

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள முக்கிய முனையான ‛ஹிலாரி முனை' சரிந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமயமலையிலுள்ள உலகின் முக்கிய சிகரமான எவரெஸ்ட்டில், மலையேற்ற வீரர்கள் தொடர்ந்து ஏறியபடி உள்ளனர். இந்நிலையில், எவரெஸ்டின் முக்கிய முனையான ஹிலாரி, சரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 மீ., உயரத்தில் பாறைகள் உடைய பகுதியாக இருந்த இந்த முனை, கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எப்போது சரிந்தது என உறுதியாக தெரியவரவில்லை.

ஹிலாரி முனை சரிந்ததை, பிரிட்டனை சேர்ந்த மலையேற்ற வீர் டிம் மோஸ்டைல் உறுதி செய்துள்ளார். ஹிலாரி முனை அழிந்துவிட்டதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.