Apr 13

கறுப்பு நாட்களை மறந்து இயல்புக்குத் திரும்பும் பிரான்ஸ்!

கடந்த மார்ச் 23 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் மூடப்பட்ட பல்பொருள் அங்காடி வியாழக்கிழமை(13) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Radouane Lakdime எனும் 25 வயதான பயங்கரவாதி மூன்று வாரங்களுக்கு முன்னர் Carcassonne இலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுளைந்து பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன் இருவரைக் கொலை செய்திருந்தான். இதில் பிரான்ஸின் தேசிய அதிகாரியாக அறிவிக்கப்பட்ட ஜோந்தாம் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.

இதனால் மூடப்பட்ட குறித்த அங்காடி நேற்று (ஏப்ரல் 13) மீண்டும் திறக்கப்பட்டது. அதனுடன் உளநல ஆதரவு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 30 ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பியுள்ளதுடன் அந்த கிராமத்திலுள்ள பலர் திரண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் அதிகாரி விரைவில் கறுப்பு நாட்களை மறந்து இயல்புக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளார்.