Apr 13

வலி நிவாரணத்திற்கு ஆதரவளிக்கும் மக்கள்

பெரும்பாலான சுவிஸ் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மற்றும் இறக்கும் நிலையில் உள்ள மக்களுக்கு வலி நிவாரணம் (palliative care) கிடைக்கச்செய்ய ஆதரவு கொடுக்கின்றனர், என பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகம் (FOPH) ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளது.

தங்கள் வாழ்க்கையை முடிக்க விரும்பும் வழியைப் பற்றி யோசித்திருப்பதாக, கடந்த ஆண்டின் ஆய்வில் பங்கேற்ற 80% க்கும் அதிகமானோர் தெரிவித்திருந்தனர். இந்த ஆய்வு, சுவிஸ் மக்களிடையே வலி நிவாரணம் (palliative care) பற்றிய மனப்பான்மை எப்படி உள்ளது என்பது பற்றி அறிய ஒரு வினாப்பட்டியலின் உதவியுடன் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் பதிலளித்த மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானோர் அவர்கள் தங்கள் வாழ்நாளின் முடிவில் அவர்கள் பெற விரும்பும் சிகிச்சையின் வகை மற்றும் பராமரிப்பு பற்றி ஏற்கனவே யோசித்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதேபோன்ற ஆய்வு 2009 இல் பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகத்தால் நடத்தப்பட்டது.