Apr 12

பிரான்ஸில் சோதனைகளில் நாய்களா???

பிரான்ஸில் போக்குவரத்துக்களில் மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக மொத்தம் 20 மோப்ப நாய்களை சேவைகளில் அமர்த்தியுள்ளனர்.Sniffer dogs road test Ile-de-France Mobilities

ஏழு மோப்பநாய்கள் 2017 ஆம் ஆண்டில் சேவையில் அமர்த்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மறந்து விட்டுச் சென்ற பொருட்களை அடையாளப்படுத்தவும், வெடிபொருட்கள் மற்றும் மர்மமான பொதிகளை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளவும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தொடரூந்து முழுவதையும் குறித்த மோப்ப நாய் வெறுமனே 10 நிமிடங்களில் சோதனை செய்து விடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் மனிதர்கள் மற்றும் வெடிகுண்டு சோதனையிடும் கருவிகளைக் கொண்டு வெடிகுண்டை கண்டுபிடிக்க 40 நிமிடங்கள் செலவாவதாகவும், இதனால் தொடரூந்துகள் தொடர்ச்சியாக தாமதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதற்காக Ile-de-France Mobilities வருடத்துக்கு 2 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.