Apr 12

பிரஞ்சு கல்வி முறையில் மாற்றம்!

ஏன் பிரஞ்சு பள்ளி மாணவர்கள் வகுப்புகளில் பதில் சொல்வதற்கு பயப்படுகிறார்கள்?  french nursery school studies changes

ஐரோப்பிய நாடுகளை விட பிரஞ்சு நாட்டு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பெரிதும் தயங்குவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியது. அதனால் என்ன பிரச்சினை?

பிரான்ஸின் பள்ளிகளுக்கான தேசிய மதிப்பீட்டுக் கவுன்சிலிங், இந்த வாரம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது. அது பிரெஞ்சு கல்வி முறை பற்றிய சில குறைகளை வெளிப்படுத்தியது.

20 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பிரஞ்சு எழுத மற்றும் விட்ட இலக்கண பிழைகளை விட இக்காலத்து மாணவர்கள் அதிகமாக விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு நீண்ட பதில் தேடும் போது, “பிரஞ்சு மாணவர்கள் பெரும்பாலும் பதில் கொடுப்பதில்லை” என்று Cnesco குறிப்பிட்டது.

இந்த அறிக்கை 9 வயதுடையவர்களை அல்லது வகுப்பு CM1 (4 வது வகுப்பு, ஆண்டு 5) இல் கற்பவர்களை குறிப்பிட்டுள்ளது.

9-வயதுடையவர்களின் பதிலானது ஐரோப்பிய நாடுகளின் அதே வயதுடைவர்களோடு ஒப்பிடும் போது எடுக்கப்பட்ட சராசரியை விடவும் குறைவாக இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த இடைவெளி அதிகரித்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 15 சதவீத மாணவர்கள், பிரான்ஸில் பதில் சொல்வதில்லை.

“கல்வி மந்திரி Jean-Michel Blanquere இதை புரிந்துகொள்வதாக அறிய முடிகிறது. மேலும் இதனை மாற்ற முயற்சி செய்கிறார், ஆனால் அவருக்கு எதிராக ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேலான வகுப்பறை மரபுகள் உள்ளன.” என ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

“பிரெஞ்சுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கொடூரமாக நடந்து கொள்வது தான் இதற்கான மூல காரணமாகும். மழலையர் பள்ளிகளில் பிள்ளைகள் பேசாமல் உட்கார்ந்து கொள்வதை தான் கற்றுக் கொடுக்கிறது.”

“தவறுகளை உண்டாக்குவது மன்னிக்க முடியாது. நேர்மறையான தூண்டுதல் கூடாது. மேலும் ஆசிரியர்கள் உற்சாகம் கொடுத்தால் பிள்ளைகள் நன்றாக வளர்வார்கள்.

ஆனால் நிச்சயமாக சில விதிவிலக்குகள் உள்ளன. சில நல்ல ஆசிரியர்களும் உள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.