Mar 11

'ஸ்மாட்' போன்களில் சி.ஐ.ஏ. உளவு பார்க்கிறதா? விக்கிலீக்ஸ் தகவல்

அமெரிக்காவின் உளவு அமைப் பான சிஐஏ, ஆண்ட்ராய்ட் போன் கள், மைக்ரோசாப்ட் நிறுவன கணினிகள், மடிக்கணினிகள், சாம்சங் ஸ்மார்ட் டி.வி. வாயிலாக உளவு பார்ப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் பல்வேறு தரப்பு மக் களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சிறப்பு கட்டுரையை வெளியிட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஆண்ட்ராய்ட் போன்கள், ஸ்மார்ட் டி.வி., கணினி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும்போது சிஐஏ நம்மை உளவு பார்க்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. இந்த கேள்விக்கு மேலோட்டமாக பதில் அளித்தால் ‘உளவு பார்க்க வாய்ப் பில்லை’ என்று கூறலாம். கொஞ்சம் ஆழமாக யோசித்து பதில் அளித்தால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே தோன்றுகிறது.

நியூயார்க்கை சேர்ந்த சவுன்ட் போர்டு ஆபரேட்டர் ஆண்ட்ரூ மார்ஷெல்லோ கூறியபோது, விக்கிலீக்ஸ் தகவல்கள் கவலை யடையச் செய்துள்ளன. எனினும் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொள்ளும்போது இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்தார்.

சட்டத் துறை வல்லுநர் ஸ்காட் வெர்னிக் கூறியபோது, சிஐஏவின் உளவு தொழில்நுட்பங்கள், உளவு தகவல்கள் உள்ளூர் போலீஸா ருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறதா என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர், இதற்கு யாருமே பதில் அளிப்பது இல்லை என்றார்.

நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த எட்மையர்வின்ஸ்கை கூறிய போது, இணையதளம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விக்கிலீக்ஸ் செய்தி உணர்த்தியுள்ளது. தவறு செய்யாதவர்கள் சிஐஏ குறித்தோ, வேறு உளவு அமைப்புகள் குறித்தோ அச்சப்பட தேவை யில்லை என்று தெரிவித்தார்.

டெக்சாஸ் மாகாணம் டல் லாஸைச் சேர்ந்த சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் மேட் ஹோல் டன் கூறியபோது, எனது நிதி பரிமாற்றங்கள், அடையாள அட்டை எண்கள், சமூக வலைதள தகவல் பரிமாற்றங்கள் ஹேக் செய்யப்படலாம் என அஞ்சுகிறேன் என்று கூறினார்.

இணையதள பாதுகாப்பு நிறு வன வல்லுநர் லித்தன் கூறியபோது, இணையதளம் மூலம் நம்மை யாராவது கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் காரில் இணையதள வசதி, கணினி கேமராவை பயன்படுத்த ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது என்றார்.

அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், புலனாய்வு விசாரணைக்காக மறையாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் தகவல் பரிமாற்றங்களை அரசு இயந்திரங்கள் இடைமறித்து பார்க்கலாம் என்று 46 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

இந்த கருத்துக் கணிப்பில் 44 சதவீதம் பேர் (குறிப்பாக இளைஞர்கள்), சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களை அரசு இயந்திரங்கள் இடைமறிக் காத வகையில் தொழில்நுட்ப பாதுகாப்பை மேலும் அதிக ரிக்க வேண்டும் என்று வலியுறுத் தினர்.

விக்கிலீக்ஸிஸ் வெளியான தகவல்கள் அமெரிக்க அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள் ளது. எனவே சிஐஏ உளவுத் துறை நடவடிக்கைகள் குறித்து விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு தகவல் அளித்தது யார் என்பது குறித்து எப்பிஐ போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கி யுள்ளனர். முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் சிஐஏ உடன் இணைந்து பணியாற்றும் அமைப்புகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.