24 மீனவர்கள் கைது – 2000 கிலோ மீன்கள் பறிமுதல்
திருகோணமலை கோணேச கோவில் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு வலைகளும், நான்கு படகுகளும், 2000 கிலோவுக்கு அதிகமாக மீன்களும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவை கடற்றொழில், நீரியல் வளத்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, சல்லி, சாம்பல்தீவு மற்றும் ஜமாலியா பிரதேச மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.